பிரதமரின் ஆலோசகராக வைத்தியர் சமன் வீரசிங்க நியமனம்
பிரதமரின் ஆலோசகராக வைத்தியர் சமன் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று(வியாழக்கிழமை) அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நியமனம் பெற்றுள்ள வைத்தியர் சமன் வீரசிங்க ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவராக பணியாற்றியுள்ளார்.
அத்துடன், 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
சினிமா செய்திகள்
Mortal Kombat II : திரை விமர்சனம்
09 May 2026
Sanam Shetty
06 May 2026
Saanve megghana
25 April 2026