300 அதிசொகுசு வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள்!

300 அதிசொகுசு வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள்!

கொரோனா தொற்று காலப்பகுதியில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 300 அதிசொகுசு வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் BMW, பென்ஸ் உள்ளிட்ட அதிசொகுசு வாகனங்கள் பல அடங்குவதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் பின்னர் இந்த வாகனங்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றில் அதிகமான வாகனங்கள் அரச சேவையாளர்களுக்கும் தீர்வை வரி இன்றி நிறுவன அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துவோருக்கும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் சில அரசாங்கத்தினால் நிபந்தனைகள் விதிக்கப்படுவதற்கு முன்னர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனையவை கடனுக்கான கடிதம் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதன் பின்னர் விநியோகிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவ்வாறான வாகனங்கள் அரசுடைமையாக்கப்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.