இரண்டாம் தவணை விடுமுறை இன்று முதல் ஆரம்பம்!
நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச, தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளுக்கும் இன்று முதல் இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் நாட்டின் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகள், பாலர் பாடசாலைகள், மதரசாக்கள் மற்றும் பிரிவெனாக்களும் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தனியார் வகுப்புக்கள் நடாத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இதனிடையே களனி பல்கலைக்கழகம் மற்றும் கம்பஹா யக்கல விக்ரமஹரச்சி தனியார் கல்வியகம் என்பன இன்று முதல் ஒருவார காலத்திற்கு மூடப்படவுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் விடுதியிலியிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.