உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு நிகராக இலங்கையிலும் தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருகின்றது.

சர்வதேசச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது 1979 ஆம் ஆண்டிற்குப் பின்னர், இந்த ஆண்டில் பாரிய வருடாந்த உயர்வைப் பதிவு செய்துள்ளது.

இந்த ஆண்டில் மாத்திரம் தங்கத்தின் விலை 60 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,549 அமெரிக்க டொலர் என்ற முன்னெப்போதும் இல்லாத வரலாற்று உச்சத்தை எட்டியது.

உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை | Rise In Gold And Silver Prices In The World Market

நத்தார் பண்டிகைக்குப் பின்னர் விலையில் சற்று சரிவு ஏற்பட்ட போதிலும், புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 4,350 அமெரிக்க டொலர் என்ற உயர்ந்த விலையிலேயே வர்த்தகமாகிறது.

இதனிடையே, தங்கத்தைப் போலவே வெள்ளியும் இந்த ஆண்டு அதிரடி விலையேற்றத்தைக் கண்டது.

கடந்த திங்கட்கிழமை ஒரு அவுன்ஸ் வெள்ளி 83.62 அமெரிக்க டொலர் என்ற புதிய உச்சத்தை எட்டியது. 

உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை | Rise In Gold And Silver Prices In The World Market

இந்தநிலையில், இன்று ஒரு அவுன்ஸ் வெள்ளி சுமார் 74 டொலர் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க மத்திய வங்கி 2026 ஆம் ஆண்டிலும் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீடுகளைத் தங்கம் நோக்கித் திருப்பியுள்ளது.