நெல் கொள்வனவுக்காக விசேட கடன் - அரசின் மகிழ்ச்சி செய்தி

நெல் கொள்வனவுக்காக விசேட கடன் - அரசின் மகிழ்ச்சி செய்தி

சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு சலுகை வட்டியிலான கடன் வழங்கும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டமானது இன்று (1) முதல் நடைமுறைக்கு வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய பெரும்போக பருவத்தில் நெல் கொள்வனவு நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கில் இந்த கடன் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல் கொள்வனவுக்காக விசேட கடன் - அரசின் மகிழ்ச்சி செய்தி | Good News For Paddy Farmers Loan From Govt

இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆண்டுக்கு 7 சதவீத சலுகை வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக 50 மில்லியன் ரூபா வரை கடனாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறாகப் பெறப்படும் கடன்தொகையை 180 நாட்களுக்குள் மீளச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.