
ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து சிரியா வெளியேறிய நாள் (அக். 29- 1961)
சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. ஆனாலும், அதன் இருப்பை கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை காணலாம். இதன்
சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. ஆனாலும், அதன் இருப்பை கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை காணலாம். இதன் தலைநகர் டமாஸ்கஸ் உலகின் பழைய நகரங்களில் ஒன்றாகும். சிரியா 1961-ம் ஆண்டு ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து வெளியேறியது.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1859 - ஸ்பெயின் மொரோக்கோ மீது போரை அறிவித்தது. * 1863 - சுவிட்சர்லாந்தில் கூடிய 16 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கத் தீர்மானித்தனர். * 1886 - அன்றைய பிரித்தானிய இந்திய அரசுக்கும், திருவாங்கூர் மன்னருக்கும் இடையே முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் கையெழுத்தானது. * 1901 - ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் வில்லியம் மக்கின்லியைக் கொலை செய்த குற்றத்திற்காக லியோன் சொல்கோஸ் என்பவனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. * 1913 - எல் சல்வடோரில் பெரும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். * 1923 - ஓட்டோமான் பேரரசு முறிவடைந்ததைத் தொடர்ந்து துருக்கி குடியரசானது. * 1929 - "கருப்பு செவ்வாய்" என அழைக்கப்பட்ட இந்நாளில் நியூயார்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. பெரும் பொருளியல் வீழ்ச்சி ஆரம்பமானது.
* 1950 - அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் தொடர் வரலாற்றுப் புதினம் முதற் தடவையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்தது. * 1956 - இஸ்ரேலியப் படைகள் சினாய் தீபகற்பத்தைக் கைப்பற்றி எகிப்தியப் படைகளை சூயஸ் கால்வாய் நோக்கி விரட்டினர். * 1961 - ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து சிரியா வெளியேறியது. * 1964 - தங்கனிக்கா மற்றும் சன்சிபார் இரண்டும் இணைந்து தன்சானியாக் குடியரசு ஆகியது. * 1964 - 565 கரட் (113 கிராம்) "ஸ்டார் ஆப் இந்தியா" உட்படப் பல பெறுமதி மிக்க வைரங்கள் நியூயார்க் நகரில் உள்ள அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டன. * 1967 - மொண்ட்ரியால் நகரில் 50 மில்லியன் மக்கள் கண்டு களித்த எக்ஸ்போ 67 உலகக் கண்காட்சி முடிவடைந்தது. * 1969 - உலகின் முதலாவது ஒரு கணினியில் இருந்து வேறொரு கணினிக்கான தொடுப்பு ARPANET மூலம் இணைக்கப்பட்டது.
* 1983 - துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,300 பேர் கொல்லப்பட்டனர். * 1991 - நாசாவின் கலிலியோ விண்கலம் 951 காஸ்ராவுக்குக் கிட்டவாகச் சென்று சிறுகோள் ஒன்றுக்குக் கிட்டவாக சென்ற முதலாவது விண்கலம் ஆனது. * 1998 - டிஸ்கவரி விண்ணோடம் STS-95 என்ற விண்கப்பலுடன் விண்ணுக்கு ஏவப்பட்டது. * 1998 - 39 பேருடன் சென்ற துருக்கி விமானம் ஒன்று குர்தியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. * 1998 - சூறாவளி மிட்ச் ஹோண்ட்டூராசைத் தாக்கியது. * 1999 - ஒரிசாவில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் 10 ஆயிரம் பேர் வரை இறந்தனர். 2.5 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர். * 2002 - வியட்நாமின் ஹோ ஷி மின் நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். * 2005 - டெல்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 60 பேர் வரை கொல்லப்பட்டனர்.