
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நாள்: 10-11-2006
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் சுட்டுக்கொலை கொழும்பில் சுடப்பட்டார். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- 1847- ஸ்டீபன் விட்னி என்ற பயணிகள் கப்பல் அயர்லாந்தின் தெற்குக் கரையில் மூழ்கியதில் 92 பேர் கொல்லப்பட்டனர். 1887 - ஹே சந்தைக் கலவரத்தின் போது மரண தண்டனை விதிக்கப்பட்ட லூயிஸ் லிங் என்ற
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் சுட்டுக்கொலை கொழும்பில் சுடப்பட்டார்.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
1847- ஸ்டீபன் விட்னி என்ற பயணிகள் கப்பல் அயர்லாந்தின் தெற்குக் கரையில் மூழ்கியதில் 92 பேர் கொல்லப்பட்டனர். 1887 - ஹே சந்தைக் கலவரத்தின் போது மரண தண்டனை விதிக்கப்பட்ட லூயிஸ் லிங் என்ற தொழிலாளர் தலைவர் லண்டனில் டைனமைட் வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்டார். 1918 - யாழ்ப்பாணம், சுன்னாகம், பருத்தித்துறை ஆகிய நகரங்களில் இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல கடைகள் சூறையாடப்பட்டன.
1928 - ஹிரொஹீட்டோ ஜப்பானின் 124-வது மன்னரானார். 1970 - சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு லூனாகோட் எனப்படும் தானியங்கி ஊர்தியைக் கொண்டு சென்றது. 1971 - கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் புனோம் பென் நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 44 பேரைக் கொன்று பல விமானங்களை அழித்தனர்.