
புதுடெல்லி அருகே இரண்டு விமானங்கள் மோதியதில் 349 பேர் பலியான நாள்: 12-11-1996
புதுடெல்லி அருகே சவுதி அரேபியாவின் போயிங் விமானமும் கசகஜஸ்தானின் இல்யூஷின் விமானமும் நேருக்கு நேர் மோதியது. இதில் 349 பேர் பரிதாபமாக இறந்தனர். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1980 - நாசாவின் விண்கப்பல் வொயேஜர் 1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது.
புதுடெல்லி அருகே சவுதி அரேபியாவின் போயிங் விமானமும் கசகஜஸ்தானின் இல்யூஷின் விமானமும் நேருக்கு நேர் மோதியது. இதில் 349 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1980 - நாசாவின் விண்கப்பல் வொயேஜர் 1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது. * 1981 - கொலம்பியா விண்ணோடம் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை இரண்டு வீரர்களுடன் ஆரம்பித்தது. * 1982 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரராக யூரி அந்திரோப்பொவ் தெரிவு செய்யப்பட்டார். * 1982 - போலந்தின் சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா பதினொரு மாத சிறைத்தண்டனைக்குப் பின்பு விடுதலையானார். * 1990 - இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார்.
* 1991 - கிழக்குத் திமோர், டிலியில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இந்தோனீசிய ராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர். * 1994 - இலங்கையின் 5-வது அரசுத் தலைவராக சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தேர்வு செய்யப்பட்டார். * 1996 - சவுதி அரேபியாவின் போயிங் விமானமும் கசக்ஸ்தானின் இல்யூஷின் விமானமும் புதுடெல்லி அருகில் நடுவானில் மோதிக் கொண்டதில் 349 பேர் கொல்லப்பட்டனர்.
* 1998 - கியோட்டோ பிரகடனத்தில் ஆல் கோர் கையெழுத்திட்டார். * 2001 - நியூயார்க் நகரில் டொமினிக்கன் குடியரசு நோக்கிச் சென்ற அமெரிக்க விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் சென்ற 260 பேரும் தரையில் இருந்த 5 பேரும் கொல்லப்பட்டனர். * 2001 - ஆப்கானிஸ்தானின் காபூல் நகரை விட்டு தலிபான் படைகள் முற்றிலும் விலகினர். * 2006 - முன்னாள் சோவியத் குடியரசான தெற்கு ஒசேத்தியா, ஜார்ஜியாவிடம் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பை நடத்தியது.