உலகப்புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி பிறந்த நாள்: 5-12-1901

வால்ட் டிஸ்னி என்று அழைக்கப்பட்ட வால்ட்டர் எலியாஸ் டிஸ்னி 1901-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே தேதியில் சிக்காக்கோவில் உள்ள ஹேர்மோசா பிரதேசத்தில் எலியாஸ் டிஸ்னிக்கும், புளோரா கோல் டிஸ்னிக்கும் மகனாக பிறந்தார்.

வால்ட் டிஸ்னி என்று அழைக்கப்பட்ட வால்ட்டர் எலியாஸ் டிஸ்னி 1901-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே தேதியில் சிக்காக்கோவில் உள்ள ஹேர்மோசா பிரதேசத்தில் எலியாஸ் டிஸ்னிக்கும், புளோரா கோல் டிஸ்னிக்கும் மகனாக பிறந்தார். உலகப் புகழ்பெற்ற ஓவியரான இவர் மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியருமாவார். மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கியவர்.

 

திரைப்பட இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். இவர் இதுவரை 26 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார். அதில் ஒரே ஆண்டில் 4 ஆஸ்கார் விருதுகளை வென்றது உலக சாதனையாக கருதப்பட்டது. 7 எம்மி விருதுகளும் பெற்றுள்ளார். 

 

அமெரிக்காவில் டிஸ்னிலாண்ட், வால்ட் டிஸ்னி உலக உல்லாச நகரம் போன்றவற்றை நிருவியவர். லில்லியன் பவுண்ட் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு டயான், சரன் என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தனர்.