
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் பிரபல தொகுப்பாளினி ஒருவர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக செல்ல உள்ளாராம்.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. தற்போது 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக சில போட்டியாளர்களை அனுப்புவது வழக்கம். அதன்படி ஏற்கனவே அர்ச்சனா, சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சென்றனர். மேலும் சில போட்டியாளர்களும் அவ்வாறு செல்ல உள்ளதாக கூறப்பட்டது.
அதன்படி சீரியல் நடிகர் அசீம் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக கூறப்பட்டது. இதற்காக குவாரண்டைனில் இருந்த அவர், சொந்த காரணங்களுக்காக திடீரென விலகினார். இதனால் அசீமுக்கு பதில் யார் செல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தற்போது அது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் ஓட்டலில் இருந்தபடி புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்த தொகுப்பாளினி மகேஸ்வரி, ‘சீக்கிரமே ஒரு ஆச்சரியமான அறிவிப்பை எதிர்பாருங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். பிக்பாஸ் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அதே ஓட்டலில் மகேஸ்வரியும் குவாரண்டைனில் உள்ளதால் அவர் விரைவில் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.