சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கும் தோற்றும் மாணவர்களுக்காக அவசர தொலைபேசி இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாட்டில் சீரற்ற வானிலை நிலவும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தொலைபேசி இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

சீரற்ற வானிலை அல்லது பேரிடர்களால் பாதிக்கப்படக்கூடிய பரீட்சார்த்திகள் அவசர தொடர்பு எண்களின் ஊடாக அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவர்களின் உடனடி பாதுகாப்பில் கவனம் செலுத்தும் வகையில், சாதாரண தரப் பரீட்சை காலத்தில் பேரிடர் அல்லது சீரற்ற வானிலை காரணமாக அவசரநிலைகளை எதிர்கொள்ளும் பரீட்சார்த்திகளுக்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) 117 என்ற அவசர தொலைபேசி எண்ணை திறந்துள்ளது.

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் | Emergency Hotlines Open For Ol Exam Candidates

அத்துடன் வேறு நிலையான தொலைபேசி இலக்கங்களும் அனர்த்த முகமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, அவசரகால சூழ்நிலைகளை முறைப்பாடளிப்பதற்காக 011 3 66 80 20, 011 3 66 81 00, 011 3 66 80 13 மற்றும் 011 3 66 80 10 ஆகிய எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.