சவுதி அரேபியா என்று பெயர் மாற்றப்பட்ட நாள் (ஜன.8- 1926)

சவுதி அரேபியா என்று பெயர் மாற்றப்பட்ட நாள் (ஜன.8- 1926)

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் யாத்திரைத் தலங்களான மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம், மதீனாவில் உள்ள மஸ்ஜித் அந்-நபவி ஆகிய இரு பள்ளிவாசல்கள் காரணமாக இது சிலவேளைகளில் இரண்டு பள்ளிவாசல்களின் இராச்சியம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. 1902 ஆம்ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அடுத்து 1926-ம் ஆண்டு அப்துல் அஸீஸ் பின் சவூத் தனது மூதாதையரது நகரமான ரியாத்தை கைப்பற்றிய பின்னர் சவூதி அரேபிய

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் யாத்திரைத் தலங்களான மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம், மதீனாவில் உள்ள மஸ்ஜித் அந்-நபவி ஆகிய இரு பள்ளிவாசல்கள் காரணமாக இது சிலவேளைகளில் இரண்டு பள்ளிவாசல்களின் இராச்சியம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. 1902 ஆம்ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அடுத்து 1926-ம் ஆண்டு அப்துல் அஸீஸ் பின் சவூத் தனது மூதாதையரது நகரமான ரியாத்தை கைப்பற்றிய பின்னர் சவூதி அரேபிய இராச்சியத்தைப் பிரகடணப் படுத்தி அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1815- அண்ட்ரூ ஜாக்சன் தலைமையில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் லூசியானாவின் நியூ ஓர்லீன்சில் பிரித்தானியரைத் தோற்கடித்தனர். * 1838- ராபர்ட் கால்டுவெல் மதப் பணியாற்ற அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார். * 1838- அல்பிரட் வெயில் புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட தொலைத்தந்தியை அறிமுகப்படுத்தினார். * 1867- வாஷிங்டன், டிசியில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் முதன்முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். * 1889- ஹெர்மன் ஹொல்லெரிக் மின்னாற்றலில் இயங்கும் பட்டியலிடும் கருவிக்கான (tabulating machine) காப்புரிமம் பெற்றார். * 1900 - அலாஸ்கா ராணுவ ஆட்சியில் வந்தது. * 1902 - நியூயார்க் நகரில் இடம்பெற்ற ரெயில் விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். * 1906 - நியூயார்க்கில் ஹட்சன் ஆற்றில் களிமண் தோண்டும் பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் கொல்லப்பட்டனர். * 1908 - நியூயார்க் நகரில் பார்க் அவெனியூ சுரங்கத்தில் இடம்பெற்ற ரெயில் விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

* 1912 - ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது. * 1916 - முதலாம் உலகப் போர் (கலிப்பொலி நடவடிக்கை): கூட்டுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியில் இருந்து வெளியேறின. * 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா உணவுப் பங்கீட்டை அறிமுகப்படுத்தியது. * 1956 - ஈக்குவேடாரில் ஐந்து அமெரிக்க மதபோதகர்கள் பழங்குடியினரால் கொல்லப்பட்டனர். * 1959 - பிடெல் காஸ்ட்ரோவின் கியூபப் புரட்சி முடிவுக்கு வந்தது. * 1962 - நெதர்லாந்தில் இடம்பெற்ற ரெயில் விபத்தில் 93 பேர் கொல்லப்பட்டனர். * 1973 - சோவியத் விண்கப்பல் லூனா 21 விண்ணுக்கு ஏவப்பட்டது.

* 1994 - ரஷ்யாவின் விண்வெளி வீரர் வலேரி பல்யாக்கொவ் மீர் விண்வெளி நிலையத்துக்கு சோயூஸ் விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்தார். * 1995 - தமிழீழ விடுதலைப் புலிகள்- சந்திரிகா அரசு போர் நிறுத்தம் ஆரம்பமாகியது. * 1996 - சயீரில் அண்டோனொவ் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 350 பேர் கொல்லப்பட்டனர். * 2008 - கொழும்பு புறநகர்ப் பகுதியான ஜா-எல்லையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டி.எம். தசநாயக்க உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.