உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகாிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகாிப்பு!

உலக சந்தையில் மசகு எண்யெயின் விலை அதிகாித்துள்ளது.

இதற்கமைய சவூதி அரேபியாவில் உற்பத்தி செய்யப்படும் பிரென்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 8.1 வீதத்தால் அதிகாித்துள்ளதோடு அதன் விலை 55.99 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை அமொிக்காவின் டபிள்யூ.ரி.ஐ. மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 7.7 வீதத்தால் அதிகாித்துள்ளதோடு, இதன் விலை 52.24 டொலர்களாக அமைந்துள்ளது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரத்தில் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை பாாியளவில் அதிகாித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.