
ஜெட் விமானம் உலகின் முதன் முறையாக 1952-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி சேவைக்கு வந்தது.
ஜெட் விமானம் உலகின் முதன் முறையாக 1952-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி சேவைக்கு வந்தது.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1798 - நெதர்லாந்தில் ராணுவப் புரட்சி இடம்பெற்றது. * 1840 - பிரித்தானிய குடியேற்றவாதிகள் நியூசிலாந்தை அடைந்தனர். * 1863 - ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போலந்து, லித்துவேனியா, பெலரஸ் ஆகிய நாடுகளில் கிளர்ச்சி வெடித்தது. * 1879 - தென்னாப்பிரிக்காவின் சூலுப் படைகள் ஐசண்டல்வானாவில் வைத்து பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர். * 1889 - கொலம்பியா கிராமபோன் வாஷிங்டனில் அமைக்கப்பட்டது.
* 1899 - ஆறு ஆஸ்திரேலிய காலனிகளின் தலைவர்கள் கூட்டமைப்பு பற்றி விவாதிக்க மெல்பேர்னில் கூடினர். * 1901 - 64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணி தனது 81-வது வயதில் காலமானதை அடுத்து அவரது மூத்த மகன் ஏழாம் எட்வர்ட் பிரித்தானியாவின் மன்னரானார். * 1905 - சென் பீட்டர்ஸ்பேர்க்கில் சார் மன்னருக்கெதிராக தொழிலாளர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது.