சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெயரை பெற்ற சோவியத் விண்கலம் லூனா 9 (பிப்.2- 1966)

சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெயரை பெற்ற சோவியத் விண்கலம் லூனா 9 (பிப்.2- 1966)

சோவியத் விண்கலம் லூனா-9 முதன் முதலாக சந்திரனில் தரையிறங்கியது. இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1876 - பராகுவே ஆர்ஜெண்டீனாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. * 1783 - ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது. * 1807 - பிரித்தானியப் படைகள் சர் சாமுவேல் ஓஷ்முட்டி தலைமையில் உருகுவேயின் தலைநகர் மொண்டெவிடியோவைக் கைப்பற்றியது.

 

சோவியத் விண்கலம் லூனா-9 முதன் முதலாக சந்திரனில் தரையிறங்கியது.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1876 - பராகுவே ஆர்ஜெண்டீனாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. * 1783 - ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது. * 1807 - பிரித்தானியப் படைகள் சர் சாமுவேல் ஓஷ்முட்டி தலைமையில் உருகுவேயின் தலைநகர் மொண்டெவிடியோவைக் கைப்பற்றியது. * 1894 - யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. * 1916 - கனடாவில் ஓட்டாவாவில் நாடாளுமன்றக் கட்டடம் தீயினால் அழிந்தது. * 1919 - சோவியத் படையினர் உக்ரைனைப் பிடித்தன. * 1930 - வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.

* 1931 - நியூசிலாந்தில் நேப்பியர் என்ற இடத்தில் இடம்பெற்ற 7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 258 பேர் கொல்லப்பட்டனர். * 1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா மார்ஷல் தீவுகளைக் கைப்பற்றியது. * 1945 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 1,000 விமானங்கள் பெர்லின் மீது குண்டுகளை வீசின. * 1969 - யாசர் அரபாத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராகத் தேர்வானார். * 1984 - சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் புரூஸ் மக்காண்ட்லெஸ், ராபர்ட் ஸ்டுவேர்ட் ஆகியோர் முதன் முதலாக விண்வெளியில் சுயாதீனமான நிலையில் நடந்து சாதனை படைத்தார்கள்.

* 1989 - பராகுவேயில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியை அடுத்து 1954-லிருந்து ஆட்சியிலிருந்த சர்வாதிகாரி அல்பிரெடோ ஸ்ட்ரோயெஸ்னர் பதவியிழந்தார். * 2006 - அல் சலாம் 98 என்ற எகிப்திய பயணிகள் கப்பலொன்று செங்கடலில் 1,721 பேருடன் மூழ்கியதில் 435 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.