பரிதாபமாக உயிரிழந்த காதலர்கள்... சிக்கிய உருக்கமான கடிதம்

பரிதாபமாக உயிரிழந்த காதலர்கள்... சிக்கிய உருக்கமான கடிதம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த தங்களை வீட்டில் ஏற்றுக்கொள்ளாததால் தம்பதிகள் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், கடுவேலி செங்கமேட்டு தோப்பில் ஒரு ஆணும், பெண்ணும் தனித்தனியே தூக்கிட்டு சடலமாக கிடந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் கும்பகோணம் பட்டீஸ்வரம் சோழன்மாளிகையை சேர்ந்த பெரியசாமி என்பதும், இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு செம்பனார்கோவில் வல்லம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு மாமனார் வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

குறித்த தம்பதிகள் எழுதிவைத்துள்ள கடிதத்தில், நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வது எங்களது உறவினர்களுக்குப் பிடிக்கவில்லை.

தங்களை யாரும் மதிக்காததால் இம்முடிவை எடுத்துள்ளதாகவும், நாங்கள் யாரிடமும் கடன் வாங்கவில்லை, ஈரோட்டில் சீட்டுப் போட்டுவைத்துள்ளோம் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துள்ளோம் அதனை எடுத்துக்கொள்ளவும்.

எங்களது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை, எங்களது உறவை உறவினர்கள் ஏற்றுக் கொள்ளாததால் மன விரக்தியில் இந்த முடிவு எடுத்துள்ளோம் என எழுதப்பட்டிருந்தது வேதனையை அளித்துள்ளது.