மீண்டும் மரபணு மாற்றம் அடையும் கொரோனா வைரஸ்

மீண்டும் மரபணு மாற்றம் அடையும் கொரோனா வைரஸ்

பிரேசில் - மனஸ் பகுதியில் கொரோனா வைரஸ் மீண்டும் மரபணு மாற்றம் அடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு, முதல் முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.

அதன் பின் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மரபணு மாற்றம் அடைந்த கொரோனா, முன்பிருந்த வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்தனர்

மரபணு மாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரசுக்கு எதிராக தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் பலன் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்னொரு வகையில் 3ஆவது முறையாக கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து இருக்கிறது.

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பிரேசில் நாட்டின் மனஸ் பகுதியில் கண்டறியப்பட்டு இருக்கிறது.

அந்நாட்டில் ஏற்கனவே வைரஸ் பாதிப்பு அதிகளவில் இருந்து வருகிறது. தற்போது வைரஸ் மரபணு மாற்றம் அடைந்துள்ளதால் 3ஆவது அலை தாக்கக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.