பரபரப்பான யாழ்.மாநகர சபை- மதுபானம் அருந்திவிட்டு சபை அமர்வில் கலந்துகொண்ட உறுப்பினர்?

பரபரப்பான யாழ்.மாநகர சபை- மதுபானம் அருந்திவிட்டு சபை அமர்வில் கலந்துகொண்ட உறுப்பினர்?

யாழ்.மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானன் மதுபானம் அருந்திவிட்டு சபை அமர்பில் கலந்து கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாத ப.தர்சானன் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்பு இன்று மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன் போதே இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானன் மதுபானம் அருந்திவிட்டு சபை அமர்பில் கலந்துகொண்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினரால் சபையில் குற்றச்சட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தன்மீது தவறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதால் மருத்துவ பரிசோதனைக்கு தான் தயாராக இருப்பதாக ப.தர்சானன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் யாழ்.மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி கருத்து தெரிவிக்கையில்,

குறித்த பரிசோதனையினை சட்ட வைத்திய அதிகாரியால் தான் பரிசோதிக்க முடியும் எனவும் அதற்காக தான் எழுத்து மூலமாக எழுதி அனுப்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து உறுப்பினர் தர்சானந் விரும்பியதால் பரிசோதனைக்கு செல்லுமாறு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அவரிடம் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தான் பரிசோதனைக்கு செல்லாது, சபை அமர்வில் கலந்துகொள்ள விரும்பவில்லை என தெரிவித்து தர்சானன் வெளிநடப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.