வடக்கு மாகாணத்தில் இன்றும் இருவருக்கு கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தில் இன்றும் இருவருக்கு கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 442 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 2 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்.

மேலும் பூநகரி வலைப்பாடு பகுதியில் தொற்றாளருடன் நேரடித் தொடர்புடைய ஒருவருக்கு தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது." என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.