தொண்டமானாறு கடலில் குளித்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம் - உறவுகள் சோகத்தில்

தொண்டமானாறு கடலில் குளித்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம் - உறவுகள் சோகத்தில்

தொண்டமானாறு சின்னக் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட நிலையில் உயிரிழந்துவிட்டதாக ஊறணி பிரதேச வைத்தியசாலையில் மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. சுமார் ஒன்றரை மணி நேர தேடுதலுக்கு பின்னர் கடலில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டான்.

உடனடியாக வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிறுவன் உயிரிழந்துவிட்டான் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

உடுப்பிட்டி சந்தை பகுதியைச் சேர்ந்த நல்லைநாதன் அவர்காஸ் (வயது-17) என்ற சிறுவனே கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவனாவான்.

ஒரே பகுதியைச் சேர்ந்த ஒன்பது பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது இந்த இடர் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.