மேற்கிந்திய தீவுகளுகளுடனான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை வீரர்கள் நால்வர் நீக்கம்

மேற்கிந்திய தீவுகளுகளுடனான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை வீரர்கள் நால்வர் நீக்கம்

மேற்கிந்திய தீவுகளுக்காக சுற்றுப்பயணம் செல்கின்ற இலங்கை கிரிக்கட் அணியில் நான்கு முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா கிரிக்கட்டின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, இசுறு உதான மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் குழுாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

காயம் உள்ளிட்ட காரணங்களால் அவர் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கான 20 பேர் கொண்ட இலங்கைக் குழாம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பட்டியல் விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.