யாழில் காணாமல் போன 20 வயது இளைஞன் சடலமாக மீட்பு!

யாழில் காணாமல் போன 20 வயது இளைஞன் சடலமாக மீட்பு!

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளது என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களைத் தேடி இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் நயினாதீவு முனை கடலில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறிகாட்டுவானிலிருந்து நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு நெடுந்தீவுக்கு திரும்பிய மீனவர்கள் இருவரே இவ்வாறு காணாமற்போயிருந்தனர்.

நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மரியநாயகம் அமலன் மேயன் (வயது-20) நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த றொபின்சன் (வயது-40) ஆகிய இருவருமே காணாமற்போயிருந்தனர்.

அவர்களில் நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மரியநாயகம் அமலன் மேயன் (வயது-20) என்ற இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மற்றையவரைத் தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது என்றும் நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.