
முஸ்லிம் எம்.பிக்களை சந்திக்கிறார் இம்ரான் கான்!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று சந்திக்க உள்ளார்.
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தமது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமருடன் பயனளிக்கும் கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு, பாதுகாப்பு நிமித்தங்கள் காரணமாகவே ரத்து செய்யப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று அமைச்சரவை சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பின்போது பலவந்த ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்ரான்கானுக்கு தெளிவுபடுத்தவுள்ளனர்.