ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற தேசிய பட்டியலுக்கான பெயர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற தேசிய பட்டியலுக்கான பெயர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
அந்த கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ஆசனத்தையும் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிப்பெறாத போதும், மொத்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தைப் பெற்றது.
எனினும் அதற்கு யாரை பெயரிடுவது என்பது தொடர்பாக நீண்டகாலமாக இழுபறி நிலவி வருகிறது.
கட்சியின் தலைவர் ரணில்விக்ரமசிங்கவை தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் அனுப்பவிருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்த போதும், அதுகுறித்த இறுதிமுடிவை இன்னும் கட்சி மேற்கொள்ளவில்லை என்று வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.