மியன்மாரில் ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுப்பு

மியன்மாரில் ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுப்பு

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்காக அந்த நாட்டு காவல்துறையினர் நடத்திய தாக்குதல்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் உயிரிழப்புக்கள் குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை

மியன்மார் காவல்துறையினரால் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது கண்ணீர்ப்புகை, இறப்பர் குண்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

யங்கொன், மண்டலே மற்றும் டேவிஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையிலேயே காவல்துறையினர் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தேர்தலை மோசடி இடம்பெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரச தலைவர்களை தடுத்து வைத்து அந்த நாட்டின் இராணுவம் கடந்த முதலாம் திகதி ஆட்சியை கைப்பற்றியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மியன்மாரில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.