
பிரம்மாண்ட படத்தில் நடிப்பதை உறுதிசெய்த வாணி போஜன்
விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படம் ‘சியான் 60’. கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நடிக்கும் பிரபலங்கள் குறித்த அறிவிப்பு கடந்த சில தினங்களாக வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி சிம்ரன், பாபி சிம்ஹா ஆகியோர் இப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்தனர்.
இந்நிலையில், நடிகை வாணி போஜன் இப்படத்தில் இணைந்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ள வாணி போஜன், சியான் 60 படத்தில் ஒரு அங்கமாக இருப்பது உற்சாகம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
விக்ரமின் கோப்ரா படத்தை தயாரிக்கும் லலித்குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் ‘சியான் 60’ படத்தையும் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Excited to be a part ❤️ thank u so much #Chiyaan60 https://t.co/64F5GPcnNo
— Vani Bhojan (@vanibhojanoffl) March 13, 2021