
உயிருக்கு போராடும் பிரபல இயக்குனரை கண்டுகொள்ளாத ஸ்ருதிஹாசன்... காரணம் என்ன தெரியுமா?
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் எஸ்.பி ஜனநாதன் சுயநினைவினை இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பல பிரபலங்கள் அவரைக் குறித்து விசாரித்து வரும் நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் எதுவும் விசாரிக்காததால் ரசிகர்களுக்கு பல கேள்விகள் எழுந்துள்ளது.
இயற்கை படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் ஜனநாதன் தற்போது தனியார் மருத்தவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
வீட்டில் திடீரென மயங்கிய நிலையில் கிடந்த இவர் தற்போது மூளைச்சாவு அடைந்துள்ளதாகவும், மூளையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகளும் செய்தனர்.
இந்நிலையில் இவரின் நிலை விரைவில் சரியாகி விரைவில் வீடு திரும்ப வேண்டும் என பல பிரபலங்கள் தங்களது பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருவதுடன் நலம் விசாரித்தும் வருகின்றனர்.
ஆனால், இவருடைய லாபம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ருதிஹாசன் இதுவரை சமூக வலைத்தளத்தில் அவரைப் பற்றி எந்த ஒரு பிரார்த்தனைப் பதிவையும் பதிவிடாதது ஆச்சரியத்தினையும், ரசிகர்களுக்கு பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
சமீபத்தில் இயக்குனர் ஜனநாதன் அளித்த பேட்டியில், லாபம் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் தன்னிடம் சொல்லாமலேயே ஸ்ருதிஹாசன் வெளியேறிவிட்டது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியிருந்தார்.
தற்போது இதனை மனதில் வைத்துக்கொண்டு தான் ஸ்ருதிஹாசன் எந்தவித ஆறுதல் கருத்தும் பதிவிடவில்லை என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்