ட்ரம்பிற்கு ஆதரவாக செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளை புட்டின் அங்கீகரித்திருக்கலாம் - புலனாய்வு அதிகாரிகள்

ட்ரம்பிற்கு ஆதரவாக செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளை புட்டின் அங்கீகரித்திருக்கலாம் - புலனாய்வு அதிகாரிகள்

கடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவாக செல்வாக்கு செலுத்துவதற்கான முயற்சிகளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அங்கீகரித்திருக்கலாம் என புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அரசாங்கத்தின் அறிக்கையின் பிரகாரம், வெற்றியாளரான ஜோ பைடன் தொடர்பில், மொஸ்கோ தவறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பரப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கமும் இறுதி முடிவுகளை சமரசம் செய்யவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு இயக்குனரின் அலுவலகத்தால் நேற்று வெளியிடப்பட்ட 15 பக்கங்களைக்கொண்ட அறிக்கை, ரஷ்யா மற்றும் ஈரானால் உந்தப்பட்ட 'செல்வாக்கு நடவடிக்கைகள்' என்று கூறியதை கோடிட்டுக் காட்டியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறிருப்பினும், தேர்தல் தலையீடு தொடர்பான குற்றச்சாட்டுக்களை ரஷ்ய அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது