‘அயலான்’ பட இயக்குனர் வீட்டில் நிகழ்ந்த சோகம்

‘அயலான்’ பட இயக்குனர் வீட்டில் நிகழ்ந்த சோகம்

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘இன்று நேற்று நாளை’. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவிக்குமார். பேண்டஸி படமான இது அந்தாண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

 

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்த ரவிக்குமார், அயலான் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

 

இயக்குனர் ரவிக்குமாரின் தாயார் 

 

இந்நிலையில், இயக்குனர் ரவிக்குமாரின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை ரவிக்குமாரின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான கவுரவ் நாராயணன், தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் ரவிக்குமாரின் தாயார் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.