மம்முட்டியா இது? ப்ருத்விராஜ் மனைவியுடன் எடுத்த செல்ஃபி! ஷாக்கான ரசிகர்கள்

மம்முட்டியா இது? ப்ருத்விராஜ் மனைவியுடன் எடுத்த செல்ஃபி! ஷாக்கான ரசிகர்கள்

மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால், முதல் முறையாக டைரக்ட் செய்யும் பெரிய பட்ஜெட் படம் பர்ரோஸ்.

இந்த படத்தின் துவக்க விழா பூஜையுடன், சமீபத்தில் எர்ணாகுளத்தில் துவங்கப்பட்டது

இந்த விழா தொடர்பான பல ஃபோட்டோக்கள் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

இதில் பலரது கவனத்தையும் கவர்ந்த ஒரு ஃபோட்டோ தான், ப்ருத்விராஜின் மனைவியும் தயாரிப்பாளருமான சுப்ரியா மேனனுடன் மம்முட்டி எடுத்துக் கொண்ட செல்ஃபி.

இந்த ஃபோட்டோவை சுப்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததும், இது இணையத்தில் வைரலாக துவங்கி விட்டது. அந்த ஃபோட்டோவுடன், ஹார்ட் எமோஜியுடன், விலை மதிப்பில்லாத செல்ஃபி என சுப்ரியா குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, குறித்த புகைப்படத்தில் மம்முட்டி மிகவும் வயதான தோற்றத்தில் இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்ருதுள்ளது.