மாலத்தீவில் இந்தியர்களுக்கு ‘நோ என்ட்ரி’ - திடீர் அறிவிப்பால் ஷாக் ஆன திரைப் பிரபலங்கள்

இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலத்தீவு சுற்றுலாத் துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சினிமா பிரபலங்கள் பலரும் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி இருப்பவர்களுக்கு கடந்தாண்டு பேரிடியாக அமைந்தது தான் கொரோனா லாக்டவுன். இதனால் வீட்டிலேயே பலரும் முடங்கிக் கிடந்தனர். பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும், பிரபலங்கள் பலருக்கும் சொர்க்க பூமியாக அமைந்தது மாலத்தீவு. 

 

அதிலும் அங்கு வரும் இந்திய சினிமா பிரபலங்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டதால், கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான பிரபலங்கள் அங்கு படையெடுக்க தொடங்கினர்.

 

மாலத்தீவு சுற்றுலாத் துறையின் டுவிட்டர் பதிவு

 

இந்நிலையில், தற்போது இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலத்தீவு சுற்றுலாத் துறை தடை விதித்துள்ளது. நாளை முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தடை நீங்கும் வரை மாலத்தீவிற்கு செல்ல முடியாது என்பதால் திரைப்பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.