இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடா பிறந்த நாள்- 1933

இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடா பிறந்த நாள்- 1933

இந்தியக் குடியரசின் 11-வது பிரதமராகவும் (1996–1997) கர்நாடக மாநிலத்தின் பதினொன்றாவது முதல் அமைச்சராகவும் (1994–1996) இருந்தவர் தேவ கவுடா. இவர் இதே நாளில் 1933-ம் ஆண்டு பிறந்தார்.

 

தேவ கவுடா என்று பரவலாக அறியப்படும் ஹரதனஹல்லி டொட்டெகௌடா தேவ கவுடா இந்தியக் குடியரசின் 11-வது பிரதமராகவும் (1996–1997) கர்நாடக மாநிலத்தின் பதினொன்றாவது முதல் அமைச்சராகவும் (1994–1996) இருந்தவர் ஆவார்.

விவசாயக் குடும்பத்தில் 1933ம் ஆண்டு இதே நாளில் (மே 18) பிறந்த தேவ கவுடா, 1962-ம் ஆண்டில் மாநிலச் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கர்நாடக அரசியலில் முக்கியப் பங்கு வகித்த கௌடா 1970-களில் ஜனதா கட்சியில் படிப்படியாக முன்னேறினார். 1980-ல் அக்கட்சி பிளவுபட்டபோது ஜனதா தளம் கட்சியை உருவாக்க பெரும் பங்காற்றினார்.

 


1996-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் முந்தைய ஆளும் கட்சியான இந்திய தேசிய காங்கிரசு தோல்வியுற்று எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சி அமைக்க முடியாதநிலை ஏற்பட்டது. அப்போது, புதியதாக உருவான ஐக்கிய முன்னணியின் சார்பில் இந்தியப் பிரதமராக தேவ கவுடா பொறுப்பேற்றார். 1996ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி பதவியேற்ற அவர், 1997ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி வரை பிரதமர் பதவியில் இருந்தார்.

1999-ல் ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேறி மதச்சார்பற்ற ஜனதா தளம் என்ற கட்சியை உருவாக்கி அதன் தலைவராக உள்ளார்.