
சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்: மே 25
ஒவ்வொரு வருடமும் மே 25-ந்தேதி சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1810 - ஆர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற புரட்சியின் போது ஆயுதம் தரித்த பியூனஸ் அயரஸ் மக்கள் ஸ்பெயின் ஆளுனரை வெளியேற்றினார்கள். * 1812 - இங்கிலாந்தில் ஜரோ என்ற இடத்தில் இடம்பெற்ற
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1810 - ஆர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற புரட்சியின் போது ஆயுதம் தரித்த பியூனஸ் அயரஸ் மக்கள் ஸ்பெயின் ஆளுனரை வெளியேற்றினார்கள். * 1812 - இங்கிலாந்தில் ஜரோ என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க வெடி விபத்தில் 96 பேர் கொல்லப்பட்டனர். * 1837 - கியூபெக்கில் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராக நாட்டுப்பற்றாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். * 1865 - அலபாமாவில் "மொபைல்" என்ற இடத்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர். * 1895 - போர்மோசா குடியரசு அமைக்கப்பட்டது. * 1953 - நெவாடாவில் ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவதும் கடைசியுமான அணு ஆற்றலினாலான பீரங்கியைச் சோதித்தது.
* 1955 - ஐக்கிய அமெரிக்காவில் கன்சாஸ் மாநிலத்தில் "உடால்" என்ற சிறு நகரை இரவு நேர சூறாவளி தாக்கியதில் 80 பேர் கொல்லப்பட்டனர். * 1961 - அப்பல்லோ திட்டம்: பத்தாண்டுகளின் இறுதிக்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் திட்டத்தை அதிபர் ஜோன் எஃப். கென்னடி அமெரிக்கக் காங்கிரசில் அறிவித்தார். * 1963 - அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க ஒன்றியம் உருவானது. * 1966 - எக்ஸ்புளோரர் 32 விண்வெளிக்கு ஏவப்பட்டது. * 1977 - ஸ்டார் வோர்ஸ் திரைப்படம் வெளிவந்தது. * 1979 - ஐக்கிய அமெரிக்காவின் ட்சி-10 விமானம் ஒன்று சிக்காகோவில் விபத்துக்குள்லாகியதில் அதில் பயணித்த 271 பேரும் தரையில் இருவரும் கொல்லப்பட்டனர். * 1982 - போக்லாந்து போரில் கவெண்ட்ரி என்ற ஆங்கிலக் கப்பல் மூழ்கியது.
* 1985 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். * 1997 - சியேரா லியோனியில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் அதிபர் அகமது கப்பா பதவியில் இருந்து ஆகற்றப்பட்டார். * 2000 - லெபனானில் 22 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த இஸ்ரேல் ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர். * 2001 - அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது எரிக் வைஹன்மாயர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது கண் பார்வை இழந்த மனிதர் என்ற பெருமையைப் பெற்றார். * 2002 - சீன விமானம் ஒன்று தாய்வானில் நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் கொல்லப்பட்டனர். 2002 - மொசாம்பிக்கில் ரெயில் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 197 பேர் கொல்லப்பட்டனர்.