
உலகளவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 16.96 கோடியை கடந்தது!
உலகளாவிய ரீதியில் 537,668 புதிய கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அந்தவகையில் கொவிட் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 16 கோடியே 96 இலட்சத்து 32 ஆயிரத்து 561 ஆக அதிகரித்து்ளளது.
அதேவேளை உலகளவிய ரீதியில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 35 இலட்சத்து25 ஆயிரத்து 113 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் இந்தியாவில் 179,770 புதிய கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது நேற்றைய தினம் நாடொன்றில் பதிவான அதிகூடிய தொற்றாளர் எண்ணிக்கையாகும்.
மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,558 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.