ஹாலிஎல, ரொசட் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி!

ஹாலிஎல, ரொசட் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி!

பதுளை - ஹாலிஎல பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹாலிஎல ரொசட் தோட்டத்தைச் சேர்ந்த குறித்த தொழிலாளி, நேற்றைய தினம், உனுகொல்ல தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது, குளவி கொட்டுக்கு இலக்கானதாக ஹாலிஹெல காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார்.

71 வயதான தோட்டத் தொழிலாளியே இந்த சம்பவத்தில் மரணித்தார்.

கணவரை இழந்த குறித்த பெண், தோட்டத் தொழிலில் இருந்து ஓய்வுபெற்றப் பின்னரும், தமது வாழ்வாதாரத்திற்காக மீளவும் பதிவுசெய்யப்படாத தொழிலாளியாக, பல ஆண்டுகளாக நாட்கூலிக்கு, தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்த அவரின் சடலம், பதுளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.