
பிரபல இயக்குனர் மணிரத்னம் பிறந்த தினம்: ஜுன் 2, 1956
இந்திய அளவில் அறியப்படும் தமிழ் இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் 1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதே நாளில் பிறந்தார். காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாகக் கொண்டு செல்வது இவருடைய பாணி. ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரகுமானை திரையிசைக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இவர்தான். ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை பள்ளியில் படித்துவிட்டு, சென்னையில் உள்ள டி.வி.
இந்திய அளவில் அறியப்படும் தமிழ் இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் 1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதே நாளில் பிறந்தார். காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாகக் கொண்டு செல்வது இவருடைய பாணி. ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரகுமானை திரையிசைக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இவர்தான்.
ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை பள்ளியில் படித்துவிட்டு, சென்னையில் உள்ள டி.வி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றிவர். யாரிடமும் உதவி இயக்குனராக பணி செய்யாமல், தன் முதல் படமாகிய ‘பல்லவி அனுபல்லவி’ படத்தினை இயக்கினார். நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு நந்தன் என்ற மகன் உள்ளார்.
இவருடைய படங்கள் சுருக்கமான வசனங்களுக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றவை. இவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவரின் இசையமைப்பில் வெளியாகியுள்ளன. இவரது முதல் படமான ‘பல்லவி அனுபல்லவி’ முதல் ‘தளபதி’ வரை இளையராஜா இசையிலும், ‘ரோஜா’ முதல் இன்றுவரை ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் வெளியாகியுள்ளன.
மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:
• 1615 - பிரெஞ்சு கத்தோலிக்க மதப்பரப்புனர்களின் முதற்தொகுதியினர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தனர்.
• 1896 - மார்க்கோனி தான் புதிதாகக் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
• 1882 - நவீன இத்தாலியை உருவாக்கிய கரிபால்டி மறைந்த தினம்.
• 1953 - இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூட்டு விழா முதற்தடவையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது.
• 1965 - ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவ் வாக் மற்றும் மார்க் வாக் ஆகியோர் பிறந்த தினம்.
• 1966 - நாசாவின் சேர்வெயர் 1 விண்கலம் சந்திரனில் இறங்கியது. சந்திரனில் மெதுவாக இறங்கிய முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும்.
• 1992 - டென்மார்க் மக்கள் மாஸ்ட்ரிக்ட் உடன்பாட்டுக்கு எதிர்த்து வாக்களித்தனர்.
• 1999 - பூட்டானில் முதற் தடவையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.