கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட 9 வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட 9 வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட 9 வைத்தியசாலைகளின் ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் நான்கு மணி நேரம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பணிப்பகிஷ்கரிப்பானது இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.

தாதியர், கனிஷ்ட பணிக்குழாமினர் மற்றும் பரிசோதனை உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த சுகாதார தரப்பினர் இந்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பில்  ஈடுபட்டதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறும் அந்த தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன.