
வடக்கு தொடருந்து சேவை நேரங்களில் மாற்றம்: விடுக்கப்பட்ட அறிவிப்பு
பொதுமக்களின் வேண்டுகோளை தொடர்ந்து, வடக்கு தொடருந்து பாதையில் இயங்கும் தொடருந்துகளின் நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, இந்த மாற்றங்கள் இன்று(07) முதல் தினசரி நடைமுறையில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த சில வாரங்களாக கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த இண்டர்சிட்டி அதிவேக தொடருந்து எண் 4021 கல்கிசை தொடருந்து நிலையத்திலிருந்து துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், காங்கேசன்துறை – கொழும்பு கோட்டை பாதையில் இயங்கும் இண்டர்சிட்டி தொடருந்து எண் 4022 இன் சேவையும் கல்கிசை வரை நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர் பற்றாக்குறை காரணமாக கடந்த நாட்களில் இவ்வாறு தொடருந்து சேவையை துவங்க முடியாமல் இருந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், எதிர்வரும் 10ஆம் திகதி முதல், தொடருந்து எண் 4021 கல்கிசையிலிருந்து துவங்கி, தொடருந்து எண் 4022 காங்கேசன்துறையிலிருந்து கல்கிசை வரை இயக்கப்படும் என இலங்கை தொடருந்து திணைக்களம் கூறியுள்ளது.