
போராட்டத்தில் குதிக்கவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
மருத்துவ சேவை மற்றும் துறையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகும் எனவும் தெரிவித்துள்ளது.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை காரணமாக, ஏராளமான கிராமப்புற மற்றும் மாவட்ட வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்குவது சவாலாக மாறியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால், மருத்துவ சேவை மற்றும் துறையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டியுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகும் எனவும் தெரிவித்துள்ளது.
வைத்தியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சமூபத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியாக வேலைநிறுத்தத்தை தொடங்க திட்டமிட்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தம் எதிர்வரும் திங்கள்கிழமை (11) காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் என்றும் அவசர சிகிச்சை சேவைகளைப் முன்னெடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், நாளாந்த வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்றும், இதுபோன்ற சூழ்நிலைகளில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பானது ஒரு சட்டவிரோத செயல்முறையின் நேரடி விளைவாகும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மருத்துவ தொழிற்சங்கங்கள் கடுமையான நடவடிக்கையை எடுக்கத் தயாராக உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சமமான தரமான சுகாதார சேவைகள் இல்லாததால், வைத்தியர்களை நியமிப்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளன.