
அமெரிக்காவின் ராப் இசைக்கலைஞர் டூப்பாக் ஷகூர் பிறந்தநாள் : ஜுன் 16, 1971
டூப்பாக் என்றழைக்கப்படும் டூப்பாக் அமரு ஷகூர் ஒரு புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைக் கலைஞர் ஆவார். 1971-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதே நாளில் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் பிறந்தார். இசை உலகில் முதலாக டிஜிட்டல் அண்டர்கிரவுண்ட் என்னும் ராப் குழுமத்தில் ஒரு நடனக்காரராக இருந்தார். 1991-இல் டூப்பாக்கின் முதலாம் இசைத்தொகுப்பு ‘2 பாக்கலிப்ஸ் நௌ’ வெளிவந்து ராப் திறனாய்வாளர்கள் இதை பாராட்டியுள்ளனர். ஆனால் இந்த இசைத்தொகுப்பில் இருந்த பாடல் வரிகளை சில மக்கள் கண்டனம் செய்தனர்.
டூப்பாக் என்றழைக்கப்படும் டூப்பாக் அமரு ஷகூர் ஒரு புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைக் கலைஞர் ஆவார். 1971-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதே நாளில் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் பிறந்தார். இசை உலகில் முதலாக
டிஜிட்டல் அண்டர்கிரவுண்ட் என்னும் ராப் குழுமத்தில் ஒரு நடனக்காரராக இருந்தார். 1991-இல் டூப்பாக்கின் முதலாம் இசைத்தொகுப்பு ‘2 பாக்கலிப்ஸ் நௌ’ வெளிவந்து ராப் திறனாய்வாளர்கள் இதை பாராட்டியுள்ளனர். ஆனால் இந்த இசைத்தொகுப்பில் இருந்த பாடல் வரிகளை சில மக்கள் கண்டனம் செய்தனர்.
1991 முதல் 1996 வரை இவர் ஐந்து இசைத் தொகுப்புகளை படைத்தார். 75 மில்லியன் இசைத்தொகுப்பு நகல்களை விற்பனை செய்த டூப்பாக், ‘விற்பனை செய்த இசைத்தொகுப்புகள் மிகுந்த ராப்பர்’ என்று கின்னஸ் உலகச் சாதனை நூலில் இடம்பெற்றுள்ளார். பல ராப் விமர்சனம் எழுத்தாளர்கள் இவரை ராப் இசையில் மிகச்சிறந்த கலைஞர்களில் சேர்த்துக் கொள்கின்றனர். ராப் இசை தவிர திரைப்பட நடிகராகவும் கவிதை எழுத்தாளராகவும் பணியாற்றினார். பெரும்பான்மையாக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வாழும் வறுமைப்பட்ட பகுதிகளில் நடந்த வன்முறை, இனப்பாகுபாடு, போதைப்பொருள் பயன் போன்ற சமூகப் பிரச்சனைகளைப் பற்றி டூப்பாக் பாடல்களை படைத்தார். சமூக சமத்துவத்தை டூப்பாக் பல பாடல்களில் ஆதரவளித்தார்.
1994-ல் நவம்பர் மாதத்தில் ஐந்து முறை துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளானார். பாலியல் குற்றத்துக்கு 11 மாதங்களாக சிறைப்பிடிக்கப்பட்டார். ஆனால் டெத் ரோ ரெக்கர்ட்ஸ் என்ற ஒலிப்பதிவு நிறுவனத்தின் அதிபர் சுக் நைட் நிதியுதவி செய்து டூப்பாக் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் டூப்பாக் டெத் ரோ ரெக்கர்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்து ராப் இசை வரலாற்றில் முதலாம் இரட்டை இசைத்தொகுப்பு ஆல் ஐஸ் ஆன் மி படைத்தார். 1996-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி லாஸ் வேகஸ் நகரில் டூப்பாக் நான்கு முறை துப்பாக்கியால் சுடப்பட்டு ஆறு நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார்.