
சூடான் விமான விபத்தில் 117 பேர் பலி
சூடானில் 2003-ம் ஆண்டு ஜுலை 8-ந்தேதி நடந்த விமான விபத்தில் 117 பேர் பலியானார்கள். இரண்டு வயது குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது. மேலும் இதே நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் * 1099- முதலாம் சிலுவைப் போர்: 15 ஆயிரம் கிறிஸ்தவ போர் வீரர்கள் பட்டினியுடன் ஜெருசலேம் அருகில் சமய ஊர்வலம் சென்றனர். * 1497 - வாஸ்கோடகாமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடக்கம். * 1709 - ரஷ்யாவின் முதலாம் பியோத்தர்,
சூடானில் 2003-ம் ஆண்டு ஜுலை 8-ந்தேதி நடந்த விமான விபத்தில் 117 பேர் பலியானார்கள். இரண்டு வயது குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது.
மேலும் இதே நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
* 1099- முதலாம் சிலுவைப் போர்: 15 ஆயிரம் கிறிஸ்தவ போர் வீரர்கள் பட்டினியுடன் ஜெருசலேம் அருகில் சமய ஊர்வலம் சென்றனர்.
* 1497 - வாஸ்கோடகாமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடக்கம்.
* 1709 - ரஷ்யாவின் முதலாம் பியோத்தர், போல்ட்டாவா என்ற இடத்தில் சுவீடனின் 12-ம் சார்ல்ஸ் மன்னனைத் தோற்கடித்தார்.
* 1815 - 18-ம் லூயி, பாரிஸ் திரும்பி பிரான்சின் மன்னரானார். இரு வாரங்களே பதவியில் இருந்த நான்கு வயது இரண்டாம் நெப்போலியன் பதவி இழந்தான்.
* 1859 - சுவீடன்- நார்வே மன்னனாக சுவீடனின் 15-ம் சார்ல்ஸ் முடி சூட்டப்பட்டார்.
* 1982 - ஈராக் அதிபர் சதாம் உசேன் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்.
* 1985 - திம்புப் பேச்சுவார்த்தைகள்: இலங்கை அரசுக்கும் ஈழ விடுதலை அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
* 1990- ஜெர்மனி ஆர்ஜெண்டினாவை வென்று கால்பந்து உலகக்கோப்பையை வென்றது.
* 2006 - ம.பொ. சி., புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன்.