தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

காலி நோக்கிய தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன வௌியேறும் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாகாண எல்லைகளில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கை காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

வார இறுதி விடுமுறை தினங்களை முன்னிட்டு மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை கடுமையாக செயற்படுத்துமாறு ஜனாதிபதி நேற்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.