ஐபிஎல் 2022 - மலிங்காவின் சாதனையை சமன் செய்தார் பிராவோ

ஐபிஎல் 2022 - மலிங்காவின் சாதனையை சமன் செய்தார் பிராவோ

ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் அமித் மிஸ்ரா 2-வது இடத்தில் உள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட் சாய்த்தவர் மலிங்கா. இலங்கையைச் சேர்ந்த அவர் 122 இன்னிங்சில் 170 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 13 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும். அவர் விளையாடிய 11 ஐ.பி.எல்.லிலும் மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே இடம் பெற்று இருந்தார்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராவோ அவரை விட 3 விக்கெட் பின்தங்கி 2-வது இடத்தில் இருந்தார்.

 

 

இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை அணியின் பிராவோ 3 விக்கெட் எடுத்தார்.

 

இதன்மூலம் 152 இன்னிங்சில் 170 விக்கெட்டுகளை கைப்பற்றி, மலிங்காவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

 

பிராவோ 170 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவரது சராசரி 24.31 சதவீதம். சிறந்த பந்து 4/22 ஆகும்.