இடித்து தரைமட்டமாக்கப்பட்ட இரண்டாம் புவனேகபாகு மன்னனின் அரச மண்டபம்!

இடித்து தரைமட்டமாக்கப்பட்ட இரண்டாம் புவனேகபாகு மன்னனின் அரச மண்டபம்!

குருணாகல் பிரதேசத்தை தனது ராஜதானியாக கொண்டு ஆட்சி செய்த இரண்டாவது புவனேகபாகு மன்னனின் அரச மண்டபம் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் பொலிஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தொல் பொருள் திணைக்கள ஆணையாளர் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த மண்டபம் மற்றும் அருகில் உள்ள கட்டிடம் என்பவற்றை தொல்லியல் நினைவிடங்களாக கருதி தொல் பொருள் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் அது இருந்து வந்தது.

பல வருடங்களாக இந்த கட்டிடத்தில் குருணாகல் மாநகர சபை ஹொட்டல் ஒன்றை நடத்தி வந்தது. இந்த நிலையில், தொல்லியல் பெறுமதிமிக்க அந்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளமை மிகப் பெரிய அநியாயம் எனவும் செனரத் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சின் செயலாளரது ஆலோசனைக்கு அமைய இந்த சம்பவம் தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மற்றும் வாய்மொழி மூலம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் புவனேகபாகு மன்னன் கி.பி. 1293 ஆம் ஆண்டு முதல் 1302 ஆம் ஆண்டு வரை குருணாகல் ராஜதானியை ஆட்சி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது