முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்ட 219 பேர் விடுவிப்பு

முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்ட 219 பேர் விடுவிப்பு

முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் 14 நாட்கள் கண்காணிப்பினை நிறைவு செய்த 219 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த 02.07.2020 அன்று தென்கொரியாவிற்கு சென்று நாடுதிரும்பியவர்கள் கட்டுநாயக்கா விமான நிலைத்தில் இருந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் 14 நாட்கள் கண்காணிப்பு மற்றும் பி.சி.ஆர் பரிசோதனையின் போது இவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படாத நிலையில் இவர்கள் இன்று அதிகாலை 4.00 மணியளவில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.

விமானப்படைத்தள கண்காணிப்பு நிலையத்தின் குறூப் கப்டன் அனுறுத்த விஜயசிறிவர்த்தன தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைத்துள்ளார்.

கடற்படையினரின் பாதுகாப்புடன் இவர்கள் 7 பேருந்துக்களில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவர்களின் கர்ப்பிணி பெண் ஒருவர் உள்ளிட்ட 6 பெண்களும் 3 சிறுவர்களும் 210 ஆண்களும் அடங்குகின்றார்கள்.