ரஜினியை அடுத்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே!

ரஜினியை அடுத்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் நடித்த பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே தற்போது பிரபல தென்னிந்திய நடிகருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் ‘ராதே ஷ்யாம்' என்றும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் தயாராகவுள்ள இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பிரபாஸ் நடிக்கவுள்ள ‘பிரபாஸ் 21’ படத்தை நடிகையர் திலகம்’ இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கவுள்ளது என்பதும் இந்நிறுவனம் தயாரிக்கும் 50வது படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தெலுங்கு திரையுலகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.