அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று பணிப்புறக்கணிப்பில்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இன்று காலை 8 மணிமுதல், நாளை காலை 8 மணிவரை, 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில், ஈடுபடவுள்ளது.
வரித் திருத்தம் மற்றும் புதிய வரி அமுலாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று இடம்பெற்ற அந்த சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
அந்த சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம், இது குறித்து எமது செய்திச் சேவைக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
எவ்வாறிருப்பினும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை அரச தாதிய உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் வரிக் கொள்கை மற்றும் ஊழியர்களுக்கான நிலுவை கொடுப்பனவு வழங்கப்படாமை என்பனவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் சில தொழிற்சங்கங்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
இதன்படி, சுகயீன விடுமுறையை அறிக்கையிட்டு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.