
'சூரரை போற்று' படத்தின் அடுத்த சூப்பர் அப்டேட்!
சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்னரே முடிவடைந்து விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன் பணிகளும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டாலும், சமீபத்தில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.
கடந்த சில நாட்களுக்கு ’சூரரைப்போற்று’ திரைப்படம் திரையிடுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது மட்டுமின்றி சென்சாரிலும் சான்றிதழ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுக்களை படக்குழுவினர் அவ்வப்போது வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் வெளியான புதிய அப்டேட்டின்படி ‘சூரரை போற்று’ படத்தின் சூப்பர் அப்டேட் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் சூர்யா ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
An exclusive 1 min rustic video of #KaattuPayale is ready to take you on a joyous ride on 23rd July @ 10AM!#SooraraiPottru#KaatukaKanule #AakasamNeeHaddhuRa@Suriya_offl #SudhaKongara @rajsekarpandian @gvprakash @nikethbommi @Aparnabala2 @editorsuriya @SakthiFilmFctry pic.twitter.com/Bv2YNY00Tw
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) July 19, 2020