4 பொருட்களின் விலைகளை மேலும் குறைத்தது சதொச

4 பொருட்களின் விலைகளை மேலும் குறைத்தது சதொச

சதொச நிறுவனம் இன்று (9) முதல் அமுலுக்கு வரும் வகையில் மேலும் 4 பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசி மற்றும் ஒரு கிலோகிராம் வெள்ளை பச்சையரிசி என்பவற்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை முறையே 164 மற்றும் 179 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்ளூர் வெள்ளை நாடு ஒரு கிலோவும் 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 180 ரூபாவாக உள்ளது.

ஒரு கிலோகிராம் கடலை பருப்பில்விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 305 ரூபா என லங்கா சதொச அறிவித்துள்ளது.