இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்ட தங்கம்

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்ட தங்கம்

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்ட சுமார் 10. 5 கோடி இந்திய ரூபா மதிப்பிலான தங்கம், மண்டபம் கடற்கரை பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.

17.74 கிலோகிராம் பெறுமதியான தங்கம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இந்திய கடலோர காவற்படை மற்றும் இந்திய வருவாய் துறை புலனாய்வு துறை இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கா மண்டபம் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.